திங்கள், 18 மார்ச், 2013

அன்னையும் விநாயகரும்!


அன்னையும் விநாயகரும்!

ஸ்ரீ அரவிந்தருடன் ஆன்மீக மாமுயற்சியில் ஈடுபட்ட அன்னை அவர்கள்ஒவ்வொரு நாளும் மாலைப் பொழுதில் யோக பயிற்சிகள் குறித்துசாதகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தார்.  ஒரு நாள், சாதகி ஒருவர் விநாயகரைப் பற்றிய கேள்வி எழுப்பினார்.இறைவன் அப்படிப்பட்ட உருவத்தி்ல் வருவாரா? அது உண்மையா? என்றுஅன்னையை வினவினார். அதற்கு பதிலளித்த அன்னை, "என்னுள்ளும் இந்தக் கேள்வி எழுந்தது.அதில் ஆழமாக தியானித்தேன். அப்பொழுது நான் சற்றும் எதிர்பாராவண்ணம் ஆம் என்பது போல விநாயகர் - நீங்களெல்லாம் பார்க்கின்றீர்களேஅதே ரூபத்தில் - என் முன் தோன்றினார். என்ன வேண்டும் என்று வினவினார். எனக்கு எப்படி உதவுவீர்கள் என்று கேட்டேன்.எல்லா வழியிலும்... செல்வத்தில் இருந்து காரியங்கள் வரை என்னால்உதவ முடியும் என்று பதில் கூறினார். அப்பொழுது ஆசிரமத்தைநடத்துவதில் நிதி ரீதியாக பெரும் சிக்கல் இருந்தது. அதனைத் தீர்க்கமுடியுமா என்று அவரைக் கேட்டேன். ஆகட்டும் என்றார். அதன்பிறகு, ஆசிரமத்தின் நிதிப் பிரச்சனை முற்றிலுமாகத் தீர்ந்தது.ஒவ்வொரு முறையும் நிதிச் சிக்கல் எழுவதும், பிறகு அதற்கு தீர்வாகநிதி வருவதும் சர்வசாதாரணமாகிவிட்டது. ஆசிரமத்தை விரிவுபடுத்துவதிலும் அவருடைய உதவியை நாடியுள்ளேன்.இந்த ஆசிரமத்தின் வளர்ச்சியில் அவருடைய பங்கு மகத்தானது" என்றுஅன்னை விரிவான பதிலளித்து முடித்தார். இதனை அன்னையின் நினைவுகள் (Vignettes of the Mother) என்ற ஸ்ரீ அரவிந்தஆசிரமம் வெளியிட்ட புத்தகத்தில் காணலாம். அன்னையினுடைய மேஜையில் விநாயகரின் திருவுருவச் சிலையும்,அதேபோல முருகரின் திருவுருவச் சிலையும் எப்போதும் இருந்ததாகஆசிரமவாசிகள் புதிவு செய்துள்ளனர். புதுவை ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திற்கு அருகில் உள்ளது மணக்குளவிநாயகர் கோயில். மிகப் பிரசித்திப் பெற்ற இத்திருக்கோயிலை விரிவாக்கம்செய்திட அக்கோயிலின் அறங்காவலர்கள் முடிவு செய்தபோது, அதற்குஇடம் தேவைப்பட்டது. கோயிலிற்கு அடுத்ததாக இருந்த கட்டடம்ஆசிரமத்திற்குச் சொந்தமானது. கோயில் அறங்காவலர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அந்தக் கட்டடத்தின் ஒரு பகுதியை கோயிலிற்குஅளித்தார் அன்னை. கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டது. கோயிலின்தென்மேற்கு மூலையில் அன்னையின் கொடை குறித்த 
கல்வெட்டுவைக்கப்பட்டுள்ளது.

anuppiya nanbarukku nanri  

சனி, 16 மார்ச், 2013

விநாயகருக்குரிய 11 விரதங்கள், 12 வகை விரதங்கள்


விநாயகருக்குரிய 11 விரதங்கள்
1.வெள்ளிக்கிழமை விரதம்
2. செவ்வாய்க்கிழமை விரதம்
3. சதுர்த்தி விரதம்
4. குமார சஷ்டி விரதம்
5. தூர்வா கணபதி விரதம்
6. சித்தி விநாயகர் விரதம்
7.துர்வாஷ்டமி விரதம்
8. நவராத்திரி விரதம்
9.வெள்ளிப்பிள்ளையார் விரதம்
10. செவ்வாய்ப்பிள்ளையார் விரதம்
11. சங்கட ஹர சதுர்த்தி விரதம்
இவ்விரதங்களில் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி
விரதம் மிகவும் முக்கியமானதாகும்.
12 வகை விரதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அவை முறையே…..

விநாயகப்பெருமானுக்குரிய விரதங்கள் மொத்தம் 10 ஆகும். அவை 1.விநாயக சதுர்த்தி விரதம் 2.சங்கடஹர சதுர்த்தி விரதம் 3.வெள்ளிப்பிள்ளையார் விரதம் 4.வெள்ளிக்கிழமை விரதம் 5.செவ்வாய் பிள்ளையார் விரதம் 6.குமார சஷ்டி விரதம் 7.தூர்வா கணபதி விரதம் 8.தூர்வாஷ்டமி விரதம் 9.சித்தி விநாயக விரதம் 10.விநாயக நவராத்திரி விரதம்.
* யாசிதம் இரு பகல் உணவு கொள்பவர்கள் இவ்விரதத்தை இருப்பர்.* இந்த வகை பாதக்கிரிச்சனம். இவ்விரதம் இருப்போர் நல்லுணர்வு கொண்டிருப்பவர்.
* இவ்வகை விரதம் பன்னகிரிச்சனம் எனப்படும். இவ்விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் வில்வ மரம், அரச மரம், அத்திமரம் ஆகியவற்றின் தளிர் இலைகளை மட்டுமே தண்ணீரில் நனைத்து உண்பர்.
* ஹெளமிய கிரிச்சனம் என்று அழைப்பர். இவ்விரதத்தை இருப்பவர்கள் பகலில் மட்டும் உண்பார்கள். பால், மோர், நீர், பொரி மாவு இவற்றில் ஒன்றை உண்பர்.
* இதற்கு அதிகிரிச்சனம் எனப் பெயருண்டு. இவ்வகையான விரதத்தை இருப்பவர்கள் 3 நாள் ஒவ்வொரு பிடி அன்னம் உண்டோ, உண்ணாமலோ இருப்பது.
* கிரிச்சனாதி கிரிச்சனம் என்ற பெயர் ஆகும். 21 நாள் பால் மட்டுமே அருந்தி, கிரிச்சனாதி கிரிச்சனம் விரதம் இருப்பர்.
* கிரசா பத்தியகிரிச்சனம். 3 நாள் காலை 3 நாள் இரவு, 3 நாள் நடுப்பகல், 3 நாள் முழுமையும் உணவின்றி இருப்பது.
* பார்ககிரிச்சனம் என அழைப்பர். 12 நாட்கள் உணவின்றி இவ்விரதத்தை இருப்பார்கள்.
* சாந்தபன கிரிச்சனம் எனப்படும். ஒரு நாள் போசனம். ஒரு நாள் கோமியம், ஒரு நாள் பால், ஒரு நாள் தருப்பை நீர் மட்டுமே அருந்தி, ஒரு நாள் ஊண், உணவு எதுவும் இல்லாமல் இருப்பது.
* மகசாந்தாவன கிரிச்சனம் என்பர். 9-வது விரதத்தில் கூறியவற்றில் ஒன்றை மட்டும் உண்டு இருப்பது.
* சாந்திராயன விரதம் எனக்கூறப்படும். வலது கையில் தொடங்கி ஒவ்வொரு பிடி அன்னம் குறைத்துக் கொண்டே வந்து தேய்பிறை முதல் ஒவ்வொரு பிடி அன்னம் கூட்டிக் கொண்டே செல்லுதல். 3 வேளையும் குளிக்க வேண்டும்.
* வாலசாந்திராயணம். சாந்திராயணத்தின் அன்று இரவில் 4 பிடி அன்னம் மட்டும் உண்பது.

ஸ்ரீ விநாயகர் விரதங்கள்


ஸ்ரீ விநாயகர் விரதங்கள்

விநாயகப் பெருமானுக்குரிய விரதங்கள் நான்கு ஓவ்வொரு வாரத்திலும் வரும் வெள்ளிக்கிழமையிலும் (சுக்கிரவாரம்) ஓவ்வொருமாதத்திலும் வரும் வளர்பிறை சதுர்த்தியும் தேய்பிறைசதுர்த்தியும் (சங்கட வறா சதுர்த்தி ) விநாயக சஷ்டியுமே அவை. சிறப்பாக ஆவணி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தியையே மக்கள் விநாயக சதுர்த்தி எனக் கொண்டாடுகின்றார்.மிகப் பழங்காலத்தில் ஆவணித் திங்களை முதல் மாதமாகக் கொண்டு மாதங்களைக் கணித்தல் பழக்கத்தில் இருந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைக்குரியது. சிங்க ஒரை (சிம்ப ர்லக்கணம்) என்றும் அதற்குரிய திங்கள் ஆவணி ஆதலின் ஆவணி தொடங்கி மாதங்களை கணக்கிடுதல் ஓரு முறை என்றும் பண்டையோர் கொண்டிருந்தனர். இந்த ஆவணி வளர்பிறைச் சதுர்த்தியே விநாயகர் அவதரித்த நாளாகும் என்பர் ஓரு சமயம் உமாதேவியார் விநாயகர் மந்திரமாகிய ஏகாகஷரத்தை உபதேசமாகக் கேட்டுப் பிள்ளையாரை உபாசித்து வந்தார். விநாயகர் ஆறு திருக்கரங்களோடும் யானை முகத்தோடும் வெண்ணிறமான குழந்தையாகப் பாலசந்திர விநாயகர் என்ற திருப்பெயர் தாங்கி உமாதேவிக்கு மகனாகத் தோன்றினார்.

அநசோமவாரமும் (திங்கட்கிழமை) சிம்ம இலக்கணமும் கூடிய நாளாகும் ஆகையால் ஆவணிச் சதுர்த்தி மிகச் சிறப்புடையதாகக் கருதப்பெறுகிறது. 
*********************************************************************************

விநாயக சதுர்த்தியன்று புற்று மண்ணால் விநாயகப் பெருமானின் திருவுருவம் அமைத்து. அதில் விநாயகரை மந்திரம் பாவனை கிரியைகளால் எழுந்தருளச் செய்து அபிஷேக அலங்காரங்கள் செய்து நிவேதனப் பொருள்கள் வைத்துப் போற்றி வழிபடுதல் முறையாகும். நிவேதன வகையில் மோதகம் அப்பம் எள்ளுருண்டை அவல் பெரி கரும்பு விளாம்பழம் முதலியவை சிறந்தவையாகும். அவருக்கு உகந்த மலர்கள் தும்பை வன்னி எருக்கு அறுகு கொன்றை முதலியவையாகும் இவ்விதம் பொருமானை வழிபட்டு மறுநாள் அவ்வுருவத்தைத் திருக்குளத்திலோ புண்ணியஆறுகளிலோ விட்டு விடுவார்கள் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை தேய்பிறைகளில் வரும் சதுர்த்தி திதிகள் வழிபாட்டுக்கு உகந்தவை. வளர்பிறை ( சுக்லபட்ச) சதுர்த்தி திகதியின் அதிபதியான தேவி தன்னை அவருடைய இருப்பிடமாகச் செய்து கொள்ளுமாறு வேண்டினாள் அதற்கு அருள் புரிந்த விநாயகர் நான் உனக்குமத்தியானத்தில் காட்சி அளித்த படியால் சுக்லபட்ச சதுர்த்தியும் மத்தியானமும் கூடிய நன்னாளில் என்னை வழிபடுவோர் என் அருளைப் பெறுவர். சதுர்த்தியன்று ஆகாரமில்லாமல் என்னை வழிபடுவோருக்கு அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு பேறுகளையும் வழங்குவேன் என்றார்.
*******************************************************************************
ஆவணித் திங்கள் வளர்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இந்தச் சதுர்த்தி விரதத்தைத் தொடங்க வேண்டும் அன்று விடியற்காலையில் எழுந்து நீராடி அன்றாடக் கடமைகளைச் செய்த பிறகு அர்ச்சனைக்குரிய மலர்களையும் மாற்றும் அபிஷேகப் பொருட்கள் தூபதீபம் ப10சைக்குரிய பொருட்களையும் சேகரித்துப் பூசை மண்டபத்தை அமைத்து விநாயகரை வழிபடுதல் வேண்டும் ர்வ்வாறு அடுத்த மாதவளர்பிறைச் சதுர்த்தி வரையில் நாள்தோறும் முறைப்படி பூசைவேண்டும்.இந்த முப்பது நாள்களிலும் ஆகாரம் பகலில் உறக்கம் இல்லாமல் இந்திரிய ஆசைகளை நீக்கி இறைஎண்ணத்திலேயே ஈடுபட வேண்டும் 31வது நாள் விருந்தினர் ஏழைகளோடு இருந்து உணவு உண்ணவேண்டும.முப்பது நாள் உண்ணாவிரதம் இருக்க இயலாதவர்கள் பூசைக்கு முதல்நாளாவது அப்படி இருந்து மற்ற நாட்களில் பால் பழம் அவிசு (உப்பின்றி சமைத்த உணவு) முதலியவற்றில் ஏதேனும் ஒன்றை உண்ணலாம். முப்பது நாள் விரதம் ர்ருக்கமுடியாதவர்கள் பூசை தொடங்கிய ஒரு நாளாவது உணவு உறக்கம் இச்சை முதலியவற்றை நீத்து இவ்விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.
*********************************************************************************
கிருஷ்ணபட்ச சதுர்த்தியின் அதிபதியான சக்தி விநாயகரை வழிபட்டபோது அவர் கூறினார் சந்திரோதயத்தில் நீ என்னை வழிபட்டதால் கிருஷ்ணபட்ச சதுர்த்தியும் சந்திரோதயமும் கூடிய காலம் முக்கிய விரதநோரமாகும்.அப்பொழுது என்னை வழிபடுவோருக்கு என் அருள் நிச்சையம் கிடைக்கும். சங்கடவறர சதுர்த்தி விரதம் கடைப்பிடிப்போரின் சங்கடமெல்லாம் தீர்ந்து விடும் உனக்கும் சங்கஷ்டவறரணி என்ற பெயர் உண்டாகட்டும் என்றார்.அங்காரகன் விநாயகரை ஒரு செவ்வாய்க்கிழமை சதுர்த்தியில் (மாசி மாததேய்பிறை சதுர்த்தி) பூசை செய்து பேறு பெற்றான் அதனால் செவ்வாயும் சங்கடவறர சதுர்த்தியும் சேரும் நாள் மிக சிறப்பு வாய்ந்தது ஆகும். மாசி மாததேய்பிறைச் செவ்வாய்க்கிழமையன்று சதுர்த்தி வருமானால் அன்று கணபதிக்கு உகந்த சங்கடவறர சதுர்த்தி விதரத்தைத் தொடங்குவார்கள்.சுங்கடவறர சதுர்த்தியன்று காலை முதல் சந்திரோதயம் வரை நீர் தவிர வேறு ஏதும் உட்கொள்ளாமல் சந்திரனைப்பார்த்து பின்னர் அருக்கியம் கொடுத்து (மந்திர நீர் இறைத்தல்) 21 அறுகம்புல் கொண்டு விநாயகரின் 21 திருப்பெயர்களை அர்ச்சித்து அதன்பின் உப்பு காரம் சேர்க்காத உணவை உட்கொள்ளவேண்டும்.இரவு கண்விழித்து விநாயகரின் கதைகளைக் கேட்க வேண்டும் இவ்வாறாக ஒராண்டு காலம் சதுர்த்தி நாட்கள் தோறும் விடாமல் விரதம் மேற்கொள்ளவேண்டும்.
*****************************************************************************
ஆண்டு முழுவதும் 24 சதுர்த்திகளிலும் விரதம் மேற்கொண்டு ஆவணி சுக்கில சதுர்த்தியில் விதரத்தைப் பூர்த்தி செய்து விநாயகரை வழிபடுவதன் வழி பெறற்கரிய பேறுகளைப் பெறலாம்.விநாயகரை வழிபடுவதற்கு ஏற்ற 21 பத்திரங்கள்( இலைகள்) வருமாறு: அலரி துளசி மருதமர இலை எருக்கு அறுகு ( வேருடன்கூடிய வெள்ளறுகு மிகச் சிறந்தது என்று கூறுவர்) கையாந்தகரை (கரிசிலாங்கண்ணி) முள்ளி அரசமர ர்லை பச்சை(மாசிப்பச்சை) நாயுருவி நாவல்மர ர்லை எலுமிச்சைர்லை நொச்சி சாதிப்பூ ர்லை ர்லுப்பைமர ர்லை இலந்தைமர இலை தேவதாருமர இலை மாதுளை இலை விஷ்ணுகாந்தி இலை.விநாயகர் சஷ்டி ஆவணி வளர்பிறைச் சதுர்த்தியும் விசாக நட்சத்திரமும் சோம வாரமும் சிம்ம இலக்கணமும் கூடிய நன்னாளில் கயமுகாசுரனைச் சம்ஹாக்கும் பொருட்டு விநாயகர் அவதரித்தார். அவர் கயமுகாசுரனை அடக்கி வாகனமாக்கிக் கொண்டு வரலாற்றையும் அறிந்துள்ளோம். முருகளைப் போலவே விநாயகப் பெருமானுக்கும் சஷ்டி விரதம் உகந்ததாகிறது. ஒரு முறை சிவபெருமானும் உமாதேவியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்த போது மகாவிஷ்ணு பொய்ச்சாட்சி சொல்லும்படி ஆகிவிட்டது. அதனால் கோபமுற்ற உமாதேவி மகாவிஷ்ணுவைக் குருட்டுமலைப்பாம்பாகப் போகுமாறு சபித்துவிட்டார். அவருக்கு ஆறுதல் கூறிய சிவபெருமான் கயமுகாசுரவதம் நடைபெறும் வரைகாத்திருக்குமாறு சென்னார்.

விநாயகர் கயமுகாசுரனுக்கு முத்தி கொடுத்த பின்னர் கணபதீச் சரத்தில் இருந்து மூஷிஹ வாகனத்தில் திரும்பும் வழியில் ஆலங்காட்டில் மலைப்பாம்பாக மாறிஇருந்த மகாவிஷ்ணுவைக் கண்ணுற்றார். அவர் பார்வை பட்ட மாத்திரத்தில் மகாவிஷ்ணு தம் சுய உருவைப் பெற்றார். மகிழ்ச்சி அடைந்தார். விநாயகரே! எனக்குக் காட்சியளித்து நன்மை புரிந்த இந்த மார்கழித் திங்கள் சஷ்டி நாளில் உம்மை யார் வழிபட்டாலும் அவர்கள் சகல துயரங்களில் இருந்தும் விடுபட்டுச் சகல விருப்பங்களையும் அடையும் படி அருள்புரியவேண்டும் என்று கோரினார். அதற்கு விநாயகரும் மகிழ்ச்சியோடு இசைந்தார்.இது விநாயக சஷ்டி என்றும் மார்கழி சஷ்டி குமார சஷ்டி பெருங்கதை விதரம் என்றும் கூறப்பெறுகிறது. கார்த்திகைத் திங்கள் கிருஷ்ண பட்சப் பிரதமை முதலாக மார்கழித் திங்கள் (வளர்பிறை) சஷ்டி இறுதியாகவுள்ள இருபத்தொரு நாளும் இந்த விரதம் கடைப்பிடிக்கப்பெறுகிறது. சைவர்களுக்கு இக்காலம் மிகவும் புனிதமான காலமாகும்.21 நாட்களும் ஒரு பொழுது உண்டு இறுதி நாளில் உபவாசம் இருந்து இளநீர் கரும்பு மோதகம் அவல் எள்ளுண்டை முதலானவற்றை நிவேதித்து சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் 21 நாட்களும் பெருங்கதை எனப்பெறும் விநாயக புராணம் (பார்க்கவ புராணம் ) படிக்க வேண்டும் கேட்க வேண்டும் ( இந்த 21 நாட்களிலும் விநாயக கவசத்தை நாள் ஒன்றுக்கு 21முறை பாராயணம் செய்தால் நினைத்த காரியம் கைகூடும்).அடுத்த சஷநாள் ஏழை எளியவரோடு இருந்து உணவு உண்டு விதரத்தை நிறைவேற்ற வேண்டும்.


   


   

சங்கட ஹர சதுர்த்தி :- அன்புடன் R.P.OM


சங்கட ஹர சதுர்த்தி :
ஆக்கம் மற்றும் தொகுப்பு
- அன்புடன் R.P.OM 8056156496
                                             ஓம் கம் கணேசாய நமஹா !

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தி ஆகும்.
வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.
ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.
ஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது.
ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் வரும் சங்கட ஹர சதுர்த்தியிலிருந்து விரதம் துவங்கி ஒவ்வொரு மாதமும் விரதமிருந்து பன்னிரண்டு சதுர்த்திகள் நிறைவுறும் தினத்தன்று, கணபதி ஹோமம் செய்து விரதத்தை நிறைவு செய்ய, எப்பேர்ப்பட்ட துன்பமும் விலகும் என்பது நம்பிக்கை.

 சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.
வாழ்வில் கஷ்ட நஷ்டங்கள் யாவும் நீங்கப் பெற்று வாழ்வாங்கு வாழ சங்கட ஹர சதுர்த்தி வழிபாடு மிக முக்கியமானதாகின்றது.


ஸ்ரீ கிருஷ்ணர், வளர்பிறை சதுர்த்தி தினத்தில் வானில் நிலவைப் பார்த்ததால், ஒரு பெரும் அபவாதம் கிடைக்கப் பெற்றார். சியமந்தக மணி எனும் கல்லினால் பெரும் கெட்டபெயர் ஏற்பட்டது. 
வளர்பிறை சதுர்த்தி தினத்தில் சந்திரனைப் பார்த்ததால், கெட்ட பெயர் ஏற்பட்டு, அதை நீக்க வேண்டி, ஸ்ரீ விநாயகருக்கு தேய்பிறை சதுர்த்தி தினத்தில் ஸ்ரீ கிருஷ்ணர், பூஜையைச் செய்தார். விநாயகர் அவருடைய அபவாதம் நீங்குவதற்கு அனுக்கிரகம் செய்தார். ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு செய்து, கெட்ட பெயர் நீக்கிக்கொண்டு நற்பெயர் பெற்றதை நினைவு கூறும் வகையிலும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு முக்கியமானதாகின்றது.
பொதுவாக, நாலாம் பிறை எனப்படும் சதுர்த்தி தினத்தன்று சந்திரனைப் பார்க்கலாகாது. அவ்வாறு பார்க்க நேர்ந்தால், கீழ்வரும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.
"ஸிம்ஹ: பிரஸேநம் அவதீத் ஸிம்ஹோ ஜாம்பவதா ஹத: ஸுகுமாரக மா ரோதீ: தவ ஹ்யேஷ ஸ்யமந்தக:" "சிங்கம் பிரசேனனைக் கொன்று இந்த மணியை அடைந்தது, அந்தச் சிங்கத்தை உன் தந்தை ஜாம்பவான் கொன்று இந்த மணியை உன்னிடம் அளித்தார்' என்பது அவள் பாடிய இந்த ஸ்லோகத்தின் பொருள்.
ஸ்ரீ விநாயகருக்கு முப்பத்திரண்டு வடிவங்கள் உண்டு. இவற்றை மூர்த்தி பேதங்கள் என்று கூறுவார்கள். அவற்றில் பதினாறு மிகவும் முக்கியமானவை. அவற்றில் ஒன்று சங்கடநாஸன கணபதியாகும்.
ஒவ்வொரு வகையான பலனைப் பெறவேண்டி ஒவ்வொரு வகையான விநாயக வடிவங்களை வணங்குவதுண்டு. கடன் நீங்க ருணமோசன கணபதியையும் பணம் வேண்டி லட்சுமி கணபதியையும் வழிபடுவதுண்டு. அந்தந்த வழிபாட்டிற்கு உரிய தனிப்பட்ட மந்திரங்களும் முறைகளும் உண்டு.
சந்திரனும் விநாயகரைச் சிறப்பாக வழிபட்டுப் பல சிறப்புகளுடன் விநாயகருடைய திருமுடியில் பிறைச் சந்திரனாகவும் நெற்றியில் முழு நிலவுத் திலகமாகவும் விளங்கும் பேறு பெற்றான். விநாயகருக்கு பாலசந்திரன் என்றும் பெயர் உண்டு. மேலும் சங்கடஹர சதுர்த்தியன்று சந்திரனையும் தரிசிக்க வேண்டிய முறையும் உண்டாகியது.
சங்கடங்கள், இக்கட்டுகள், நெருக்கடிகள் தீருவதற்கு சங்கடஹர கணபதியை வணங்குகின்றோம்.


சங்கடஹர கணபதியை வணங்கியவர்களில் செவ்வாய் கிரகம் எனப்படும் அங்காரகன் முக்கியமானவர். விநாயகரை வழிபட்டுப் பல மங்கலங்களுடன் கிரகப் பதவியையும் 'மங்கலன்' என்னும் சிறப்புப் பெயரையும் விநாயகரிடமிருந்து பெற்றார். ஆகையால் சங்கடஹர சதுர்த்திக்கு அங்காரகச் சதுர்த்தி என்றும் பெயர் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமையன்று வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருந்து வழிபட்டால் சங்கடங்கள் தீருவதோடு செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் கெடுதல்களும் தோஷங்களும் நீங்கும்.

சங்கடஹர சதுர்த்தி தின வழிபாட்டினால், சனி பகவானின் பார்வையால் ஏற்படும் தோஷங்களும், ஸர்வ ரோகங்கள் எனும் நோய்களும் (கலௌ சண்ட விநாயக: - புராண வாக்கியம்) நீங்குகின்றன என்று புராணங்கள் கூறுகின்றன.
சங்கட ஹர சதுர்த்தி ஒவ்வொரு மாதமும் உண்டு.
விநாயகர் சதுர்த்திக்கு (ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி) முன்னதாக வரும் சங்கடஹர சதுர்த்திக்கு மஹா சங்கட ஹர சதுர்த்தி என்று பெயர்.
வருடத்தின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளையும் செய்த பலன் ஒரு மஹா சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்வது கிடைக்கப் பெறும்.

சங்கட ஹர சதுர்த்தி வழிபாட்டினால் கிடைக்கப் பெறும் பலன்கள் :
கோசாரப் பலன்களை அருளும் சந்திர பகவான் விநாயகரின் அருள்பெற்றதால், சந்திர பகவானின் நற்பலனாக, நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் தடங்கல்கள் நீங்கும்.
செவ்வாய் பகவான் வழிபட்டதால், அங்காரக (செவ்வாய்) தோஷ பாதிப்புகள் நீங்கித் திருமணத் தடைகள் நீங்கும். நல்ல மங்கலமான நல்வாழ்வு அமையும்.
சனி பகவானின் தோஷம் நீங்குவதால், ஆயுள் அபிவிருத்தி, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும்.
**********************************************************************************
சங்கட ஹர சதுர்த்தி கதைகள்  -1
**********************************************************************************

சந்திர பகவான் சாபம் பெற்ற கதை :
*************************************
விநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் திருநடனம் செய்து கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான்.
கோபம் கொண்ட விநாயகர், சந்திரனை நோக்கி, "நீ தேய்ந்து மறையக் கடவது" என்று சபித்தார். பின், தவறுக்கு வருந்திய சந்திரன், விநாயகரை நோக்கித் தவமிருக்க, சந்திரனைத் தன் தலைமீது ஏற்று, "பாலசந்திரன்' என்ற பெயருடன் அருள்பாலித்து சந்திரனுக்கு வளரும் தன்மையத் தந்தார். அவ்வாறு சந்திர பகவான் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தியாகும். ஆகவே, சதுர்த்தி திதி விநயாகருக்கு உகந்ததாயிற்று.

 சந்திர பகவான் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார்.
தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளைத் தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம்.

 சங்கடம் என்றால் இக்கட்டு, தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள்.
வாழ்வில் கஷ்ட நஷ்டங்கள் யாவும் நீங்கப் பெற்று வாழ்வாங்கு வாழ சங்கட ஹர சதுர்த்தி வழிபாடு மிக முக்கியமானதாகின்றது.
*********************************************************************************
சங்கட ஹர சதுர்த்தி கதைகள்  - 2
***********************************************************************************
 கிருஷ்ணர் சங்கடன் நீங்க பெற்ற கதை .
******************************************
ஒரு சமயம் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா,  நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்க வேண்டியதாகிவிட்டது. அதன் பலனாக, சத்ராஜித் எனும் யதுகுலத்தைச் சேர்ந்த குறுநில மன்னனிடம் இருந்த 'சியமந்தக மணி' என்னும் தினந்தோறும் எட்டுப் பாரம் பொன் சுரக்கும் வல்லமை பெற்ற அதிர்ஷ்ட ரத்தினத்தை ஸ்ரீ கிருஷ்ணர் அபகரித்துக் கொண்டதாக அவருக்குப் பெரும் பழி ஏற்பட்டது. உண்மையில் அந்த ரத்தினத்தை, சத்ராஜித்,  பிரசேனன் என்னும் பெயருடைய தன் தம்பியிடம் கொடுத்து வைத்திருந்தான். ஒரு நாள் பிரசேனன், காட்டிற்கு வேட்டையாடச் செல்லும் போது, ஒரு சிங்கம் அவனை கொன்று விட்டு அவனிடம் இருந்த மணியைக் கவர்ந்து கொண்டது. அந்த சிங்கத்தைக் கரடி அரசனான ஜாம்பவான், போரிட்டு வென்று சியமந்தக மணியைத் தனதாக்கிக் கொண்டார்.  இந்த ஜாம்பவான், ஸ்ரீ ராம அவதாரத்தின் போது, சீதாபிராட்டியைக் கண்டடைய உதவி செய்தவர். ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்திக்கு அவரது பலம் பற்றி நினைவூட்டியவர் இவரே. இவருக்கு, ஸ்ரீ ராமபிரானை ஆலிங்கனம் செய்ய வேண்டுமென்று ஆசை. ஆனால் தன் உடல் முழுதும் அடர்ந்திருக்கும் ரோமம் அவரைக் புண்ணாக்கக் கூடுமென்று அஞ்சி தன் ஆவலை வெளியிடவில்லை. தன் தம்பியை, சியமந்தக மணிக்காக ஸ்ரீ கிருஷ்ணரே கொன்றிருக்கக் கூடுமென்ற அபவாதத்தை சத்ராஜித் பரப்பினார். ஸ்ரீ நாரத மஹரிஷி, ஸ்ரீ கிருஷ்ணரிடம் வந்து, சதுர்த்தி தினத்தன்று சந்திரனைப் பார்த்ததால் ஏற்பட்ட விளைவு இது என்பதை விளக்கி, விநாயகரை வழிபட, இந்த அபவாதம் நீங்கும் என்று எடுத்துரைத்தார். அதன் படி ஸ்ரீ கிருஷ்ணரும் விநாயகரை வழிபட்டார்.  பின் அந்த அபவாதத்தை  நீக்குவதற்காக, இந்த சியமந்தக மணியைத் தேடி, ஸ்ரீ கிருஷ்ணர் காட்டிற்கு வந்தார். பிரசேனன் ,சிங்கம் ஆகியோர் இறந்து கிடப்பதை பார்த்துப் பின், கரடியின் காலடித் தடத்தை பின்பற்றி, கானகத்துள் சென்ற போது, ஒரு குகைக்குள்  மட்டும் பெரும் ஒளி தென்பட, உள்ளே சென்றார். அது, ஜாம்பவானின் குகை. அவர் மகள் ஜாம்பவதி, தன் தம்பியின் தொட்டிலின் மேல் சியமந்தக மணியைக் கட்டித் தொங்கவிட்டு, தொட்டிலை ஆட்டியபடி மேற்கூறிய ஸ்லோகத்தைப் பாடிக் கொண்டிருந்தாள். "சிங்கம் பிரசேனனைக் கொன்று இந்த மணியை அடைந்தது, அந்தச் சிங்கத்தை உன் தந்தை ஜாம்பவான் கொன்று இந்த மணியை உன்னிடம் அளித்தார்' என்பது அவள் பாடிய இந்த ஸ்லோகத்தின் பொருள். இதற்குள் ஜாம்பவான், ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்த்து விட்டதால் அவருடன் போருக்குச் சென்றார். இருபத்தேழு நாட்கள் போர் நடந்தது. மல்யுத்தத்தில் வல்ல ஜாம்பவான் ஒவ்வொரு முறையும் ஸ்ரீ கிருஷ்ணரை யுத்தத்துக்காகத் தழுவிய போது இனம் புரியாத மனமகிழ்வை அடைந்தார். அவரை அறியாமல், அவர் ராம நாமத்தை உச்சரிக்க, ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் உருவில் காட்சி தந்தார். தன் பக்தனின் ஆவலை இவ்வாறு இருபத்தேழு முறை ஆலிங்கனம் செய்து பூர்த்தி செய்தார் பகவான். பின், ஜாம்பவான் ஜாம்பவதியை,  ஸ்ரீ கிருஷ்ணருக்கு மணம் செய்து கொடுத்து, சியமந்தக மணியையும் அளித்தார். இந்த மணியை சத்ராஜித்திடம் சேர்ப்பித்துத் தன் அபவாதம் நீங்கப் பெற்றார் ஸ்ரீ  கிருஷ்ண பரமாத்மா. சத்ராஜித் தன் மகளான சத்யபாமாவை தான் செய்த தவறுக்குப் பரிகாரமாக, ஸ்ரீ கிருஷ்ணருக்கு மணம் செய்து கொடுத்தான். இந்தப் புராணத்தைப் படிப்பவர்கள்  யாவரும் அவர்களுக்கு நேர்ந்த வீண் பழி நீங்கப் பெறுவர்.
**********************************************************************************
சங்கட ஹர சதுர்த்தி கதைகள்  -3
**********************************************************************************
சங்கட ஹர சதுர்த்தி பலனை தானம் பெற்ற இந்திரன் கதை :
*************************************************************
சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தவர்கள் தங்கள் விரதப் பலனை யாருக்காவது தானம் கொடுத்தால் கூட அவருக்குச் சங்கடங்கள் விலகி விநாயகரின் அருள் கிடைக்கும் என்பதற்குக் கீழ்க்கண்ட கதை ஒரு உதாரணம் ஆகும்.
ஒருமுறை தண்டகா வனத்தில் வசித்து வந்த வேடன் ஒருவன் “விப்ரதன்” என்னும் பெயருடையவன் கொலை, கொள்ளைகளுக்கு அஞ்சாதவனை நல்வழிப்படுத்த எண்ணிய “முத்கலர்” என்னும் முனிவர் அவனுக்குச் சங்கட சதுர்த்தி விரதம் பற்றியும், விநாயகர் வழிபாடு, மூலமந்திரம் போன்றவற்றையும் உபதேசித்தார். அன்று முதல் மூலமந்திரத்தை இடைவிடாது ஜபித்து வந்த விப்ரதன், நாள் ஆக, ஆக, உருவமே மாறி அவனின் நெற்றிப் பொட்டில் இருந்து துதிக்கை போலத் தோன்ற ஆரம்பித்து, அவனும் விநாயகரைப் போன்ற வடிவமே பெற ஆரம்பித்தான்.
ப்ருகண்டி” என அழைக்கப் பட்ட அவனுக்கு விநாயகரின் தரிசனமும் கிடைக்கவே அவனைப் பார்த்தாலே கிடைக்கும் புண்ணியத்தைப் பெற தேவலோகத்தில் இருந்து தேவேந்திரன் தன் விமானத்தில் ஏறி, பூவுலகு வருகிறான். தரிசனம் பெற்றுத் திரும்பும் வேளையில் விதிவசத்தால் அவனின் விமானம் மண்ணில் புதையுண்டு போகிறது. அப்போது சங்கட சதுர்த்தி விரதம் இருந்தவர்கள் தங்கள் விரத பலனைக் கொடுத்தால் விமானம் கிளம்பும் எனத் தெரிய வர, அவ்வாறே விரத பலனைப் பெற்றுக் கொண்டு விமானம் மூலம் அமரர் உலகு அடைகிறான் தேவேந்திரன். இவ்விதமாய் விநாயகரின் திருவிளையாடல்கள் அநேகம்.